தொடக்க செபம்
சீர்திகழ் சுடராம் பேரொளி ஞாயிறாய்
செய்கையாய், ஊக்கமாய், சித்தமாய், அறிவாய்!
நின்றிடும் இறைவா நித்தமும் போற்றி!
இன்பம் கேட்டேன், ஈவாய் போற்றி!
துன்பம் வருங்கால், துடைப்பாய் போற்றி!
அறிவு தேடினேன், அளிப்பாய் போற்றி!
ஒழுக்கம் நாடினேன், உயர்த்துவாய் போற்றி!
நிறைவு செபம்
அறிவுக்கு ஊற்றாம் இறைவா போற்றி!
அளித்த அறிவுக் கொடைக்கு நன்றி!
கற்றபின் அதற்குத் தகவே நிற்க!
உற்ற வகையில் உதவுவாய் போற்றி!